சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்ற அனுமதி

0
152

சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்ற அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பை துவங்குவதற்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் 20 தொழிலாளர்களின் உதவியுடன் படப்பிடிப்புகளை நடத்த முடியாது என சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கலந்தாலோசனைகளில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். சின்னத்திரை தயாரிப்பாளர்கள் அதனை உறுதி செய்து கொண்டு படப்பிடிப்புகள் நடத்திட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.