சிம்புக்கு முத்தமிட்ட பிரபலத்தின் வைரல் வீடியோவை பாருங்க🤩

0
63

2013-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ‘அட்டாரிண்டிகி தாரேடி’. த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கியிருந்த இப்படத்தில் ஹீரோவாக ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. இதன் தமிழ் ரீமேக்கான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ கதாநாயகனாக சிம்பு நடித்திருந்தார்.
இப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்க, சிம்புவுக்கு ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ புகழ் மேகா ஆகாஷ் நடித்திருந்தார். மேலும், முக்கிய வேடங்களில் பிரபு, கேத்ரின் திரசா, ரம்யா கிருஷ்ணன், மஹத் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க, பிரபல கோரியோகிராபர் சதீஷ் இந்த படத்தில் நடன ஆசிரியராக பணியாற்றினார். இந்த நிலையில் தற்போது சதீஷ் தனது ட்விட்டரில் சிம்புவுடன் பணியாற்றியதை நினைவுகூறியுள்ளார். ஆமாங்க, அந்த படத்தில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “என்ன இருந்தாலும் அவரோடு பணியாற்றுவது ஒரு தனி அனுபவம். நான் என்ன கோரியோகிராப் செய்தாலும் சில நொடிகளில் அதை எளிமையாக ஆடுவது அவருடைய இயல்பு என்று கூறி அவரை பெருமைப்படுத்தியுள்ளார்”