சிறைக்கைதிகளை சந்திப்பதற்கு வரையறை !

57

புதுவருட காலத்தில் , சிறைக்கைதிகளை சந்திப்பதற்காக வருபவர்கள் சிறைச்சாலைகளுக்குள் அனுமதிக்கப்படுதல் வரையறுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் கைதி ஒருவர் மாதம் ஒன்றில் இரு பார்வையாளர்களை மட்டுமே சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, மாதம் ஒன்றில் வழங்கப்படும் வாய்ப்பு இந்த முறை தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு வழங்கப்படும் என்றும், ஆனால் பார்வையாளர்கள் பலர், கைதிகளை சந்திக்க வாய்ப்பளிக்கப்படாது என்றும் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்திருந்தார் .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: