சிறைச்சாலையில் பூனை செய்த பயங்கர வேலை! அதிர்ச்சியில் பொலிஸ்!!

0
109

பூனை ஒன்றினூடாக சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்டுள்ள சம்பவம் இலங்கையில் பதிவாகியுள்ளது.

வெலிகடை சிறைச்சாலைக்குள்ளேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறைச்சாலையின் முன்னால் பூனை ஒன்று உலாவிக்கொண்டிருந்ததாகவும் சிறைச்சாலை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குறித்த பூனையைப் பிடித்து சோதனைக்கு உட்படுத்தியதாகவும் தெரிவித்த பொலிஸார், இதன்போதே இந்த விடயம் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த பூனையின் கழுத்தில் 1.2 கிராம் ஹெரோயின் போதைப்பொள் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பூனையை பொரள்ளை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக சிறைச்சாலை ஆணைக்குழு சந்தன ஹேகநாயக்க தெரிவித்துள்ளார்.