சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் இருந்து வெளியான புதிய தகவல்

0
23

சமீபத்தில் சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலை வெளியிட்டார். ‘செல்லம்மா’ என்ற இந்த பாடல் வெளியான சில நாட்களில் 10 மில்லியன் பார்வைகளைப் பெற்று இப்போது, ‘டாக்டர்’ படப்பிடிப்பு முடிவடையும் வரை நடிகர் தனது வரவிருக்கும் ‘அயலான்’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க மாட்டார் என்று ஒரு புதிய தகவல் வந்துள்ளது.

ஆமாங்க,நெல்சன் திலீப் குமார் ‘டாக்டர்’ படப்பிடிப்பை முடிக்க இன்னும் நேரம் உள்ளதாம் அதன் பின் சென்னையில் நடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.அது முடிந்தபிறகே ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ படத்தை தொடரவுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன் படப்பிடிப்பை முடிக்க இன்னும் 20 நாட்கள் தேவைப்படுகிறது.

இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். அவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கான அறிமுக பாடல் உட்பட மூன்று பாடல்களை உருவாக்கியுள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸுடன் இணைந்து 24 ஏ.எம் ஸ்டுடியோஸால் இப்படம் தயாரிக்கப்படுகிறது.அதேபோல், ‘டாக்டர்’ படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிக்கிறது.