செவ்வாய் கிரகத்தில் பறந்த ஹெலிக்கொப்டர்-நாசா சாதனை!

118

செவ்வாய் கிரகத்தில் தனது ஹெலிக்கொப்டரை வெற்றிகரமாக பறக்கவிட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இன்ஜினிட்டி என்ற சிறிய ரக ஹெலிகாப்டரைப் பயன்படுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா திட்டமிட்டுள்ளது.

செவ்வாயில் தற்போது நடத்தப்படும் ஆய்வுகளுக்கு ரோவர் என்ற வாகனம் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் ஆய்வுப் பணிகளுக்கு இலகுரக ஹெலிகாப்டரைப் பயன்படுத்துவது குறித்து கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு நடத்தப்பட்டு வந்துஇ இறுதியாக கடந்த ஆண்டு இந்தச் சோதனை வெற்றியடைந்தது.

ஒரு கிலோ 800 கிராம் எடை கொண்ட இந்த ஹெலிகாப்டர்இ ஈர்ப்பு விசை இல்லாததால் பூமியில் இயங்குவதை விட அதிக வேகமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்ஜினிட்டி (Ingenuity) என்ற பெயருடைய இந்த ஹெலிகாப்டர் 1.8 கிலோ எடை கொண்டதாகும்.

பெர்சிவரன்ஸ் விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டரை பறக்க விடும் முயற்சிகள் நாசாவால் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2ஆவது முறையாக இது ஒத்தி வைக்கப்பட்ட, தற்போதுச் கிரகத்தில் இன்ஜினிட்டி ஹெலிகாப்டர் வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டு உள்ளது.