சேரனால் கண்கலங்கிய அருண்விஜய்

0
68

சமீபத்தில் 2001-ஆம் ஆண்டில் திரைக்கு வந்த தனது ‘பாண்டவர் பூமி’ திரைப்படத்தைப் பற்றி கண்கலங்கிய அருண் விஜய்.அதுக்கு காரணம் ,இப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதனைப் பார்த்த இயக்குநர் சேரன், தனது ட்விட்டரில் “இன்று பாண்டவர் பூமி உங்கள் பெயரை இந்த சினிமா உச்சரிக்க ஆரம்பித்த முதல் படம் என நினைக்கிறேன். உங்கள் தன்னம்பிக்கையும் முயற்சியுமே உங்கள் பலம். இன்னும் நெடுந்தூரம் போங்கள். நான் பார்த்து ரசிக்கிறேன். நீங்கள் கடந்த பாண்டவர் பூமி எனும் மைல்கல்லில் அமர்ந்தபடி. நன்றி” எனப் பதிவிட்டார்.

இதற்கு கண்கலங்கிய அருண் விஜய், சேரனின் ட்வீட்டுக்கு ரிப்ளை செய்தார். அதில் “என்றும் என் நினைவில் மறவாத ஒரு மைல்கல்- பாண்டவர் பூமி! அதன் மூலம் பல நுணுக்கங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தவர் நீங்கள். நேற்றுதான் படப்பிடிப்பு நிறைவு பெற்றது போல் உள்ளது. உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.. செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது!!” என பதிவிட்டார். இந்த ட்வீட் பார்வையாளர்களில் பலரின் மனதை கொள்ளை கொண்டுள்ளது .