ஜோதிகா,கீர்த்தி சுரேஷ் படங்களை தொடர்ந்து OTT-ல் வெளியாகும் அடுத்த படம்

0
69

இந்த ஊரடங்கு சினிமா வணிகத்தையும் திரைப்படத் துறையையும் பெருமளவில் பாதித்துள்ளது. தியேட்டர்களை மீண்டும் திறக்க முடியாத தற்போதைய சூழ்நிலையில், பல திரைப்படங்கள் நேரடி OTT-ல் வெளியாகயுள்ளது

இதில் அமேசான் பிரைம் வீடியோவில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் வெளியான பிறகு, சமீபத்தில் காயத்ரி ரகுராமின் யாதுமாகி நின்றாய் படம் ஜீ 5 இல் வெளியிடப்பட்டது. இப்போது, ​​மற்றொரு பெண்ணியம் திரைப்படம் நேரடி OTT -ல்வெளியாக உள்ளது .

ஆமாங்க,வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த டேனி மற்றும் அறிமுக இயக்குனர் சத்தியமூர்த்தி இயக்கியுள்ள இந்த படம் ஜீ 5 பிளாட்பாரத்தில் நேரடி OTT-ல் விரைவில் வரும் என தெரிகிறது. சந்தோஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் யோகி பாபு மற்றும் வேலா ராமமூர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்