டாடாவின் சிஎன்ஜி கார்கள் விரைவில்!

73

2022ஆம் ஆண்டில் இருந்து சிஎன்ஜி டாடா கார்கள் வெளிவரவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவின் தலைவர் ஷைலேஷ் சந்திரா சில வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். டியாகோ சிஎன்ஜி காரில் 12 கிலோ அல்லது 60 லிட்டர்கள் கொள்ளவு கொண்ட சிஎன்ஜி டேங்க் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் காரின் பின்பக்கத்தில் சிஎன்ஜி டேங்க் இருப்பதனால் , பொருட்களை வைக்கும் பகுதியின் அளவு குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது . சிஎன்ஜி கார்கள் பொதுவாகவே டாக்ஸி போன்ற பயன்பாட்டிற்காக தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக சிஎன்ஜி வாகனங்கள் அதிக மைலேஜை தரக்கூடியவை. டியாகோ சிஎன்ஜி காரின் மைலேஜை 30- 35 கிமீ அளவில் இருக்கும் என சொல்லப்படுகின்றது. டாடாவின் இந்த சிஎன்ஜி மாடல்களில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட், 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .