டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கன்னி மாடம்

0
123

கனடா நாட்டில் உள்ள டொராண்டோ நகரில் ஆண்டுதோறும் சர்வதேச தமிழ் திரைப்பட விழா நடைபெறுகின்றது. அத்தோடு இந்த ஆண்டுக்கான விழா வருகிற செப்படம்பார் 11ந் திகதி முதல் 13ந் திகதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது.

மேலும் இத்திரைப்பட விழாவில் பல படங்கள் தேர்வாகி உள்ளன. இதில் திரையிட கன்னிமாடம் படமும் தேர்வாகி உள்ளது.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியான இந்த படத்தை நடிகர் போஸ் வெங்கட் இயக்கி இருந்தார். ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு என்ற புதுமுகங்களுடன் இயக்குனர் யார் கண்ணனின் மகள் சாயாதேவி ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார். ஆடுகளம் முருகதாஸ், மைம்கோபி, உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஹரி சாய் இசை அமைத்திருந்தார். இனியன் ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

அத்தோடு போஸ் வெங்கட் இந்தப் படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் தெரிவாகியதற்கு நன்றிகளையும் அவர் சார்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஆணவக் கொலை பற்றிய பேசிய இந்த படத்திற்கு பரவலான பாராட்டுகள் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.