டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் தெரிவு !

50

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றான ஆசிய மண்டல மல்யுத்த சாம்பியன்ஷிப் கஜகஸ்தான் நாட்டில் உள்ள அல்மாதி நகரில் நடை பெற்றுவருகின்றது. ஆசிய மண்டல மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்
பெண்களுக்கான 57 கிலோ உடல் எடைப்பிரிவில் 19 வயதான இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் போட்டியின் ஆரம்பம் முதலே அபாரமாக செயற்பட்டு ஆதிக்கம் செலுத்தினார். இறுதிப்போட்டி வரை அவர் வெறும் 2 புள்ளிகளை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

தொடக்க சுற்றில் தென்கொரியாவின் ஜியென் உம்மை வீழ்த்திய அவர் அடுத்த பந்தயத்தில் கஜகஸ்தானின் எம்மா திசினாவையும், அரைஇறுதியில் உஸ்பெகிஸ்தானின் ஷோகிடா அக்மெடோவாவையும் சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததன் மூலம் அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: