தந்தை மீது அதிக பாசம் வைத்த பெண் குழந்தை; கொரூரமாக கொன்ற தாய்!!

68

தாய் ஒருவர் தனது பெண் குழந்தை தன் மீது அதிக பிரியம் இல்லாமல் கணவன் மீது அதிக பிரியமாக இருந்ததால் கொலை செய்துள்ளார்.

இந்த கொடூர சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் தெரியவருகையில், பெங்களூரு மல்லத்தஹள்ளியில் வசித்து வருபவர் ஈரண்ணா. இவரது மனைவி சுதா(35). இவர்களூக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருந்தது.

தாய் சுதாவை விடவும் தந்தை ஈரண்ணா மீதுதான் அந்த குழந்தைக்கு அதிகம் பாசம் இருந்துள்ளது.

ஈரண்ணா – சுதா இருவருக்கும் இடையே சண்டை வரும்போதெல்லாம் தந்தை ஈரண்ணா பக்கமே நின்றிருக்கிறது. ஈரண்ணாவுக்கு ஆதரவாகவே பேசியிருக்கிறது குழந்தை.

நேற்று முன் தினம் டிவியில் செய்தி சேனலை மாற்றுவது தொடர்பாக ஈரண்ணாவுக்கும் சுதாவுக்கும் வாக்குவாதம் வந்திருக்கிறது.

அப்போதும் தந்தைக்கு ஆதரவாக பேசியதோடு அல்லாமல், சுதாவை பார்த்து, ‘பைத்தியம்’ என்று சொல்லி சிரித்திருக்கிறது அந்த குழந்தை.

விபரம் தெரியாத குழந்தையின் அந்தபேச்சை கேட்டு மகிழ்ந்து போயிருக்க வேண்டிய சுதா, குழந்தையை கொலை செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு வெறியாகி இருக்கிறார்.

அதே ஆத்திரத்துடன் நேற்று காலையில் அன்னபூர்னேஷ்வரி நகர் அருகே நாகரபாவி பகுதியில் இருக்கும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு அருகே தனது குழந்தையை அழைத்து சென்று தனது துப்பட்டாவால் குழந்தையின் கழுத்தை நெறித்துக்கொலை செய்து விட்டு அங்கேயே உடலை போட்டுவிட்டு வந்துவிட்டார்.

கடைக்கு அழைத்து சென்றபோது குழந்தை மாயமாகிவிட்டதாக, கணவருடன் சென்று ஞானபாரதி போலீசில் புகார் அளித்துவிட்டு, குழந்தையை தேடுவது போல் நாடகமாடி வந்துள்ளார்.

இறந்த கிடந்த குழந்தை பற்றி சிலர் அன்னபூர்னேஷ்வரி நகர் போலீசாருக்கு தகவல் சொல்ல, அவர்கள் வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி, ஞானபாரதி போலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

குழந்தையின் கழுத்தில் காயம் ஏற்படுத்திய சந்தேகத்தில், சுதாவிடம் துருவித்துருவி விசாரித்ததில் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: