தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பிச்சென்றவர் மன்னாரில் கைது

0
115

சிலாபம் மாதம்பே பகுதியை சேர்ந்த 36 வயதான விஜித்த றுவான் குணவர்த்தன என்பவர் வெளி நாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்துவரப்பட்டு வவுனியா பெரியகாடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

அத்தோடு அவர் நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) இரவு தப்பி சென்ற நிலையில் குறித்த நபர் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மன்னார் சௌத்பார் புகையிரத நிலைய பகுதியில் வைத்து சௌத்பார் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து அந்த நபரை மீண்டும் வவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல இராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.