தமிழகத்தில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பிணையில் விடுதலை

0
113

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 இலட்சத்து 64 ஆயிரத்து 440 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 5 இலட்சத்து 28 ஆயிரத்து 459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 4 இலட்சத்து 38 ஆயிரத்து 720 வாகனங்கள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 9 கோடியே 31 இலட்சத்து 224 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி செய்படுபவர்களை பொலிஸார் கைது செய்து, வழக்கு பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.