தமிழ் மக்களை புறக்கணிக்கும் கிராம சேவகர்: சிங்கள மக்களுக்கே உதவி

5356

கண்டி மாவட்டத்தில் உள்ள அலவதுகோடே பிரதேசத்தில் மஹமுதுன எனும் கிராமத்தில் வசித்து வருகின்ற மக்களிடையே உள்ள வேற்றுமை பாகுபாடானது அப்பிரதேச மக்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்திய நாளிலிருந்து இன்றைய 01.04.2020 தினம் வரைக்கும் குறித்த கிராமத்திற்கு மாத்திரம் எந்த ஒரு நிவாரண உதவியும் கிடைக்க பெற வில்லை எனவும் மற்றும் இப்பிரதேசத்தில் மட்டும் 17தமிழ் பேசும் குடும்பங்கள் காணப்படுகின்றது. ஆனாலும் கிராம சேவையாளரியம் இது குறித்து வினவிய போது அவர் எந்தவித பொறுப்புணர்ச்சியும், இன்றி வெறும் கடமைக்கு மாத்திரமே பதிலளித்தாக தெரிவிக்கப்பட்டது

ஆனால் இதே பிரதேசத்தில் வசித்து வருகின்ற சிங்கள மக்களுக்கு மாத்திரம் நிவாரணம் கிடைத்திருக்கின்றது.ஆகவே குறித்த பிரதேச கிராம சேவகரிடம் மக்களிடையே எந்தவித பாரபட்சமும் பாராமல் குறித்த மக்களுக்கு வேண்டிய உதவிகளை கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.