தற்கொலை செய்தவர் பகிர்ந்த வீடியோவால் சிக்கல்!

0
50

அமெரிக்காவின் மிசிசிப்பியைச் சேர்ந்த 33 வயதான ரொன்னி மெக்னட் என்பவர் தற்கொலை செய்து கொள்வதைக் காட்டும் வீடியோ ஒன்றை நீக்குவதற்கு வீடியோ பகிர்வுத் தளமான டிக்டொக் போராடி வருகிறது. 

பேஸ்புக்கில் தோன்றிய அந்த வீடியோக் காட்சி பல நாட்களாக பரவி இருப்பதோடு ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் பகிரப்பட்டுள்ளது. 

அதிர்ச்சியளிக்கக் கூடிய இந்த வீடியோ தொடர்ச்சியாக பல தடவைகள் வருவதாக பலர் முறையிட்டுள்ளனர். 

டிக்டொக் இளைஞர்களிடம் அதிகம் பிரபலம் பெற்றதாகும். இந்த வீடியோ பதிவை மீண்டும் மீண்டும் பதிவேற்றும் கணக்குகளை தடை செய்வதாக அந்த செயலி குறிப்பிட்டுள்ளது. 

“தற்கொலையை வரவேற்பது அல்லது புகழ்வது, பாராட்டுவதை காட்டும் உள்ளடக்கம் எமது கொள்கைகளை மீறும் என்ற நிலையில் இந்த வீடியோ எமது கட்டமைப்பால் தானாக கண்டறியப்பட்டு தடுக்கப்படுகிறது” என்று டிக்டொக் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார். 

எனினும் கடந்த மாதம் இந்த வீடியோ பதிவிடப்பட்ட தினத்திலேயே அதனை நீக்கிவிட்டதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.