‘தல தளபதி பட வில்லன்’ செய்த செயலால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள் -இதோ வீடியோ 🤩

0
86

‘தல’ ‘தளபதி’ சூர்யா போன்ற ஆகியோருடன் இணைந்து நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால்.இந்த ஊரடங்கில் வித்யுத் ஜம்வால் ஒரு சிறந்த நேரத்தைக் கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். அவரது சில அசத்தலான ஒர்க்அவுட் வீடியோக்களை பதிவிட்டு, ரசிகர்களை மேலும் கவர்ந்துவருகிறார்.அதுமட்மில்லாமல் தற்போது, அவர் தனது சோசியல் மீடியா ஃபால்லோவெர்ஸ்க்கு அசாதாரணமான ஒரு குறிப்பைக் கொடுத்து ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.

ஆமாங்க #CountryBoy மற்றும் #ITrainLikeVidyutJammwal ஆகிய ஹாஷ்டேக்குகளுடன், தன் சமையலறையில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு எரியும் சிகரெட்டைக் கொண்டு அசாதாரணமாக ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டாக வெட்டிக் காட்டியுள்ளார். மேலும், எந்த ஒரு சிறு பொருளையும் ஆயுதமாக பயன்படுத்தமுடியும் என்ற அவர், மலையேற்றம், பயணம் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த உதவிக்குறிப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

View this post on Instagram

#CountryBoy #ITrainlikeVidyutJammwal

A post shared by Vidyut Jammwal (@mevidyutjammwal) on