திருகோணமலை – மட்கோ பிரதேசத்தில் குரங்கு கடித்ததில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை 7. 15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த சிறுவன் திருகோணமலை-மட்கோ, முகம்மதிய்யா நகர் பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.

வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு காலை சாப்பாட்டை வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்த வேளையில் பின்னால் சென்ற குரங்கு காலை பிடித்த போது சிறுவன் கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து, சிறுவனை குரங்கு கடித்துக்  காயப்படுத்தியதுடன் சிறுவன் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை நகர்ப்பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருவதாக அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here