திருகோணமலையில் தமிழரசுக்கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்!

0
73

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களின் அறிமுக பிரச்சாரக்கூட்டம் திருகோணமலை சிவன் ஆலய முன்றலில் நடைபெற்றது.

“தமிழ் உரிமைகளை மீட்கவும், அபிவிருத்தியை மேற்கொள்ளவும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்போம்” எனும் தொனிப்பொருளில் நடத்தப்பட்ட குறித்த நிகழ்வானது சிவன் ஆலயத்தின் விஷேட வழிபாடுகளின் பின்னர் ஆரம்பமானது.

திருகோணமலை மாவட்ட தமிழிரசு கட்சியின் கிளைச் செயலாளரும், நகர சபை உறுப்பினருமான கே. செல்வராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள் பங்கேற்றதுடன் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா சம்பந்தன் அவர்களும் பங்கேற்றிருந்தார்