துப்பாக்கி சுடுதலில் இந்தியா முதல் இடம் .

74

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 53 நாடுகளை சேர்ந்த 294 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 10வது நாளான இன்று 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஆடவர் அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.

குர்பிரீத் சிங், விஜய்வீர் சித்து மற்றும் ஆதர்ஷ் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணியை இறுதி போட்டியில் அமெரிக்க அணி தோற்கடித்திருந்தது. இதன்பின் இந்திய அணியின் ராஜேஷ்வரி குமாரி, மணீஷா கீர் மற்றும் ஷ்ரேயாசி சிங் ஆகியோர் கொண்ட மகளிர் அணியானது டிராப் குழு போட்டியில் தங்க பதக்கம் வென்றிருந்தது
இதுவரை நடந்த போட்டிகளின் முடிவின் அடிப்படையில் பதக்க பட்டியலில் 14 தங்கம் உள்பட 29 பதக்கங்களுடன் இந்தியா முதல் இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது ..