நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
252

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இதுவரை மொத்தமாக ஆயிரத்து 620 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 781 ஆக உயர்வடைந்துள்ளதாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 829 பேர் வைத்தியசாலைகளில் தங்கிச் சிகிச்சைபெற்று வருகின்றனர். 55 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இனங்காணப்பட்ட 55 பேரில் 25 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் 19 பேர் கட்டாரிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 8 பேர் குவைட்டிலிருந்து வருகைதந்தவர்கள் என்பதுடன் 3 பேர் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பியோர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பி வந்தவர்களில் இதுவரை 505 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குவைத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.