“நான் 5 மாதம் கர்பம்” பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மைனா நந்தினி !!

0
59

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை மைனா நந்தினி. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது நண்பர் யோகேஸ்வரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். யோகேஸ்வரன் அவர்களும் பிரபல தொலைக்காட்சியில் “நாயகி” என்னும் சீரியலில் நடித்து வருகிறார் மற்றும் நந்தினி அவர்களும் தற்போது மற்றொரு தொலைக்காட்சியில் “அரண்மனைக்கிளி” என்னும் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மே 21, நந்தினி அவர்களுக்கு பிறந்த நாள். அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அழகான இன்ப அதிர்ச்சியை கொடுத்து அவரது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடினர். மேலும் இவ்விருவரும் நேரலை உரையாடல் ஒன்றில் பேசும் போது நந்தினி அவர்கள் முதல் முறையாக தான் 5 மாதம் கர்பமாக இருப்பதை தெரிவித்தார். மேலும் குழந்தையின் வருகை குறித்து சந்தோஷமாக காத்துகொண்டு இருப்பதாகவும் இருவரும் தங்களது மகிழ்ச்சியை பகிர்த்துள்ளனர்.