மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வெள்ளைவான் ஒன்றில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் யுவதியொருவரைக் கடத்திச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தக் கடத்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தலைமையிலான குழுவினரே ஈடுபட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் வீட்டிற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சென்ற குறித்தகுழு, வீட்டை உடைத்து, நித்திரையில் இருந்த 21 வயதுடைய யுவதியைக் கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்..
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி ஜுனியர் வீதியில், இரு பெண் பிள்ளைகள் உள்ள ஒரு வீட்டிலே அதிகாலை 1.30 மணியளவில் வெள்ளைவான் ஒன்றில் நான்கு பேர்கொண்ட குழுவுடன் வந்த, நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர், வீட்டின் வெளிக்கதவின் பூட்டினை உடைத்து, வாசல் கதவையும் உடைத்து உள்நுழைந்ததுடன், வீட்டின் உரிமையாளரைத் தாக்கிவிட்டு, அங்கிருந்த யுவதியைக் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர் எனவும், இலங்கை மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் எனவும், அவருக்கு திருமணம் முடித்து மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..
பிற செய்திகள்:
- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிவாஜிலிங்கம்
- ஒரு பணிஸ் திண்பண்டத்தில் 12 ரூபா கொமிஷன், அமைச்சர் ரோஹிதவின் ஊழல் ஜனாதிபதி கவனத்திற்கு!
- இருவேறுபட்ட இடங்களில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் வைத்தியசாலையில்…!
- நீரிழிவு குருதி அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு!
- அதிரடிப்படையினரின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 2 ஆயிரத்து 755 கிலோ!
- திருகோணமலையில் கணவனால் தாக்கப்பட்ட மனைவி உயிரிழப்பு!
- யாழில் பதற வைத்த பாரிய விபத்து; அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்கள்!
- அமெரிக்க தூதுவர் வவுனியாவிற்கு விஜயம்; 21 ஆயிரம் அமெரிக்க டொலர் மதிப்பில் திட்டம் ஆரம்பம்!
- ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடையோருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!
- காணாமல்போன மகனைத் தேடியலைந்து போராடிய தாய் மகனை காணாமேலேயே மரணம்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்