பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடவுள்ள இலங்கை கிரிக்கட் அணியினர்

0
110

இலங்கையை சேர்ந்த 13 தேசிய விளையாட்டு வீரர்களை கொண்ட குழுவினர் இன்று முதல் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

அவர்கள் 12 நாள் பயிற்சி முகாமில் இணைந்து பயிற்சியினை பெறுவர் என “ஸ்ரீலங்கா கிரிக்கட்” தெரிவித்துள்ளது.

இதில் ஆரம்ப பயிற்சிகள் பந்து வீசும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கிரிக்கட் கழகத்தில் தமது பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வீரர்கள் பயிற்சி காலத்தில் விருந்தகம் ஒன்றில் தங்கவைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு உறுப்பினர்களை கொண்ட குழு பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் உதவு பணியாளர்கள் விளையாட்டு வீரர்களுடன் இணைந்து செயல்படுவர்.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவரது உடல் நலன்கள் விளையாட்டு அமைச்சு மற்றும் சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய பேணப்படும் என “ஸ்ரீலங்கா கிரிக்கட்” தெரிவித்துள்ளது.