பழுதடைந்த பாண் விற்பனை செய்த வியாபாரி

0
150

வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பழுதடைந்த பாண் விற்பனை செய்த வர்த்தகருடன் நுகர்வோர் முரண்பட்டுக்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,இன்று காலை வவுனியா பண்டாரிகுளத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பாண் வேண்டுவதற்காக சென்றுள்ளார்.
இதன்போது இன்று கொண்டுவரப்பட்ட புதிய பாண் உள்ளதா என வர்த்தகரிடம் கேட்டபோது அவரும் ‘ஆம்’ என தெரிவித்து தன்வசம் வைத்திருந்த பாணை விற்பனை செய்துள்ளார்.

அதனை பெற்றுக்கொண்ட நுகர்வோர் வீட்டிற்கு கொண்டு சென்று காலை உணவிற்காக பாணை உண்டபோது அது பழுதடைந்திருந்தது.

இதனையடுத்து குறித்த வர்த்தக நிலையத்திற்கு வந்த அவர் வர்த்தகரிடம் பாண் பழுதடைந்துள்ளது. புதிய பாண் என்று தந்தீர்களே ஏன் பழுதடைந்துள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் குறித்த வர்த்தக நிலையத்திற்கு பாண் வழங்கும் வெதுப்பகத்தினருடன் குறித்த நுகர்வோர் தொடர்பு கொண்டபோது தான் இன்று பாண் வர்த்தக நிலையங்களுக்கு வழங்கவில்லை என தெரிவித்ததுடன் குறித்த வர்த்தக நிலையத்தினர் பழைய பாணையே வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நுகர்வோர் இனிவரும் காலங்களில் இவ்வாறு செய்யாதீர்கள் என வர்த்தகருக்கு தெரிவித்து பொது சுகாதார பரிசோதகரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.