பாகிஸ்தான் பலூசிஸ்தான் ஆளுநரான ஓய்வு பெற்ற நீதிபதி அமானுல்லா கான் யாசின்சாய் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் எதிர்கொள்ளும் “மாற்றப்பட்ட அரசியல் சவால்களை” கருத்தில் கொண்டு புதிய ஆளுநரை நியமிக்க விரும்புவதனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானால் பலூசிஸ்தான் ஆளுநரான ஓய்வு பெற்ற நீதிபதி அமானுல்லா கான் யாசின்சாய் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அச்சுறுத்தப்பட்டுள்ளார்.இம்ரான் கானால் யாசின்சாய்க்கு எழுதிய கடிதத்தில், தான் அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் , அவர் ஒரு நலன்புரி அரசை உருவாக்குவதற்கு பாடுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அக் கடிதத்தில் “இருப்பினும், தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் மக்கள் மீதான நமது உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதையும், ஒரே நேரத்தில் உறுதிசெய்வதற்கான ஒரு நுட்பமான சமநிலைச் செயலுக்கு இந்த நேரத்தில் திறமை மற்றும் புத்திசாலித்தனம் தேவை” என்றும்
“பலூசிஸ்தானில் ஒரு புதிய ஆளுநரை நியமிக்க நான் விரும்புகிறேன், எனவே ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.