பாகுபலி நடிகரின் திடீர் நிச்சயதார்த்தம்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

0
24

“பாகுபலி” புகழ் நடிகரான ராணா டகுபதி அவர்கள் சில நாட்களுக்கு முன்பு தனது காதலியை சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுக்கு முதல் முறையாக அறிமுகம் செய்து வைத்தார். இவரது அறிவிப்பை தொடர்ந்து இருவருக்கும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமாய் இருந்தது. ரசிகர்கள் மட்டுமின்றி திரை துறையினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், ராணா அவர்களுக்கு தற்போது முறைப்படி நிச்சயதார்த்தம் நிகழ்த்துள்ளது. தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை ராணா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இவரது நிச்சயதார்த்தத்திற்கு திரை பிரபலங்களான, சுருதி ஹாசன், ராஷி கண்ணா, சாய்பல்லவி, திவ்யதர்ஷினி, விக்ரம் பிரபு, சனம் ஷெட்டி, ஷரியா ரெட்டி, க்ரிதி கர்பந்தா மற்றும் பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவருடைய காதலியின் பெயர், மிஹீகா பஜாஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணா டகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ் அவர்களுக்கு எங்களது சமூகம் ஊடகம் சார்பாக வாழ்த்துக்கள்.