பாடசாலைகளுக்கு அடுத்த வருடம் வரை பூட்டு – சற்று முன்னர் அதிரடி தீர்மானம்

0
3926

இந்தியாவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் அதன்படி அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 2021ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலேயே இந்த தீர்மானம் மத்திய அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் உயர்கல்வித்துறை செயலாளர் அமித்காரே தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த நிலையில் அடுத்தாண்டு ஜனவரியில் முதற்கட்டமாக 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே கல்வி நடவடிக்கைகள் முதலில் ஆரம்பிக்கப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.