பாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமான கலந்துரையாடல்

0
1181

கொவிட் 19 கொரோனா தொற்று நோய் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமான சுகாதார முன்னேற்பாடுகள் சம்பந்தமான கலந்துரையாடல் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று முற்பகல் ஆரம்பமானது.

குறித்த கலந்துரையாடல் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச். றிஸ்வின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை வலய கோட்டக்கல்வி அதிகாரி பி.எம் பதுறுதீன் உள்ளிட்ட கல்முனைக் கோட்ட முஸ்லீம் பிரிவு அதிபர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்களும் பங்குபற்றினர்.

இதன் போது இக்கலந்துரையாடலில் தாய் சேய் வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.சி.எம். பஸில் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.