பாதுகாப்பு வழங்குமாறு, கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கடிதம்!

80

கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் , 500-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள், தாங்கள் அனுபவிக்கும் இடர்களில் இருந்து பாதுகாப்பு வழங்குமாறு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர் . குறித்த கடிதத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், மவுண்ட்டைன் வியூவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமையகதில் பணியாற்றிய எமி நீட்ஃபெல்ட் என்பவர், கூகுள் அலுவலகத்தில், தனக்கு தொல்லை கொடுத்தவர் குறித்து பலமுறை புகார் அளித்தும், நிறுவனம் தொல்லை கொடுத்தவருடன் இணைந்து பணியாற்ற கூறியதோடு , விருப்பப்பட்டால் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என தெரிவித்தமை பற்றியும் , ஒரு கட்டத்தில் தொல்லையை தாங்க முடியாமல் எமி நீட்ஃபெல்ட் பணியில் இருந்து வெளியேறியமை குறித்தும் குறிப்பிடப்படுள்ளது .

இதையடுத்து, கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையையில், ஊழியர்களின் புகார்களை புலனாய்வு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுவனம் மேம்படுத்தியுள்ளது என்றும் புகார் அளிப்போருக்கு புதிய பாதுகாப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: