பிரான்ஸ் நாட்டின் தலைநகரில் துப்பாக்கிச் சூடு!

62

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் ஹெண்ட்ரி-டுனால்ட் என்ற மருத்துவமனையின் முன் வாசலில்
அந்த நாட்டு நேரப்படி இன்று மதியம் 1.40 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது . துப்பாக்கியுடன் இருசக்கரவாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவரால் மருத்துவமனை முன் நின்றுகொண்டிருந்த ஒரு ஆண் நபர் மீதுதுப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறித்த ஆண் நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த தாக்குதலை தடுக்கவந்த மருத்துவமனையில் பணிபுரிந்துவந்த பெண் காவலாளியும் துப்பாக்கிச்சூட் டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தப்பிச்சென்றுள்ள நிலையில் ,அந்தநாட்டுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: