விங்காஜாய் தனது புதிய ஹெவி பாஸ் வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் ஆன BT-5800 ஹெட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த பிராண்ட் 40 மணிநேர இயக்க மற்றும் பேச்சு நேரத்தை வழங்கும் என்றும் ஹெட்ஃபோன்களில் சௌகரியமாக அணிய மென்மையான இயர் பேட்ஸ் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது . இந்த வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் உடன் மைக் பொருத்தப்பட்டுள்ளமையும் சிறப்பம்சமாகும்.

BT-5800 ஹெட்போன் ஆனது ஸ்மார்ட்போன்களுடன் இணைக்க புளூடூத் v5.0 வசதியைக் கொண்டுள்ளது.
மேலும் ஹெட்ஃபோன்கள் வயர்லெஸ் / TF / SD கார்டு / ஆக்ஸ் செயல்பாடு போன்ற பல இணைத்தல் முறை விருப்பங்களைக் கொண்டுள்ளன. ஹெட்செட் ஒரு உள்ளமைக்கப்பட்ட இரட்டை மைக்ரோஃபோனைக் கொண்டுள்ளது, இது 360 டிகிரி சரவுண்ட் ஒலி ஆதரவை வழங்குகிறது. வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் இலகுரக அமைப்பு மற்றும் மடிக்கக்கூடிய வடிவமைப்பைக் கொண்டுள்ளன. இது எளிதான வசதியான நீண்ட மணிநேர பயன்பாட்டிற்கு வலியற்ற சௌகரியத்தை வழங்குகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: