புதிய கருவி அறிமுகம் : இனி 14 நாட்கள் தேவையில்லை 15 நிமிடங்கள் போதும்..!

0
18421

கொரோனா வைரஸ் தொற்று நபர்களிடத்தில் காணப்படும் பட்சத்தில் ஒருவரின் உடல் நிலை பற்றி  அறிந்து கொள்வதற்கு சுமார் 14 நாட்கள் வரை காலம் தேவைப்படுகின்றது.இந்த நிலையில் தற்போது உருவாக்கிய  புதிய கருவியின் பயன்பாடு சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் வகையில் கொரோனா தொற்று நபரை அடையாளம் காண 15 நிமிடங்களில் அக்கருவி மூலம் அறிய கூடிய வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கருவி அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த கருவியினை கொண்டு அடுத்த வாரத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கர்பிணி தாய்மார்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்குமானால் இந்த இயந்திரத்தை வாயிலாக இலகுவாக பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என அந்நாட்டின் தேசிய பல்கலைக்கழகத்தின் வைத்தியர் பேராசிரியர் சஞ்சய சேனாநாயக்க ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

இதற்கமைய ஒரு துளி இரத்தத்தினை சோதனைக்குட்படுத்துவதன் மூலம் 15 நிமிடங்களில் கொரோனா தொற்று இருக்கின்றதா இல்லையா என்பதனை கண்டறிந்து விடலாம் என அவர் தெரிவித்துள்ளதோடு மூக்கின் உட்புறங்களில் காணப்படும் சளி படலங்களை கொண்டும் பரிசோதனை செய்ய முடியும் என வைத்தியர் மேலும் அறிவித்துள்ளார்.இதற்கமைய சளிபடலங்களை கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டால் 45 நிமிடங்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று காணப்படுகின்றதா இல்லையா என்பதனை அறிவித்து விடலாம் எனவும் ,தேசிய பல்கலைக்கழகத்தின் வைத்தியர் பேராசிரியர் சஞ்சய சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here