பெங்களுரூக்கு 160 வெற்றி இலக்கு!

43

14-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்துள்ள நிலையில் , முதலாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களுரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கிடையில் .
நடைபெறுகின்றது . இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற விராட் கோலி மும்பை அணியை துடுப்பெடுத்தாட பணித்திருந்தார்.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது . மும்பை அணியில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 35 பந்துகளில் 49 ரன்கள் விளாசியிருந்தார் .

பந்து வீச்சில் ஹர்ஷல் படேல் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் .இதையடுத்து, 160- ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி துடுப்பெடுத்தாடும் நிலையில் 11ஓவர்களில் 90 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.