பொன்னியின் செல்வம் படத்தில் இணையும் விக்ரம் மகளை பாருங்க

0
100

மணிரத்னம் தனது கனவுத் படமான ‘பொன்னியன் செல்வன்’ படைப்பை உருவாக்கி வருகிறார்.இப்படம் எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி எடுக்கப்படும் இதில் பாலிவுட், கோலிவுட், மாலிவுட் பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இதனை லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் பேனரில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.

ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், விக்ரம், த்ரிஷா, சரத்குமார், ஐஷ்வாயா ராய், விகரம் பிரபு, ரகுமான், லால், ஜெயராம், ஐஷ்வர்யா லட்சுமி, அஸ்வின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு மற்றும் ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக தயாராகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்தில் நிறைவடைந்தது. மேலும் கொரோனா ஊரடங்கின் காரணமாக படப்பிடிப்பு காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் புதிதாக குழந்தை நட்சத்திரமாக பிரபலம் அடைந்த சாரா அர்ஜுன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.ஆமாங்க,ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் குழந்தையாக அறிமுகமாகி பார்க்கும் எல்லோரும் வியந்துபோகும் அளவிற்கு நடித்து, மிகவும் பிரபலமானார். அதையடுத்து, தமிழில் சித்திரையில் நிலாச்சோறு, சைவம், விழித்திரு ஆகிய படங்கலில் நடித்த அவர், கடந்த ஆண்டு வெளியாகி பார்வையாளர்களின் பேராதரவையும், மிகப்பெரிய அங்கீகார்த்தையும் பெற்ற ‘சில்லு கருப்பட்டி’ படத்தில் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்திருந்தார்.