பொலிவான சருமத்திற்கு ஒலிவ் எண்ணெய்

0
116

எண்ணெய் வகைகளில் ஒலிவ் எண்ணெயில் தான் விட்டமின்கள், கனிமச் சத்துக்கள் போன்ற எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.

இவ் எண்ணெய் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றதொன்று. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள் ஏராளமாக இருப்பதால் தான்,  சரும பராமரிப்பிற்கு மிகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்தகைய ஒலிவ் எண்ணெய்யை  தினமும் இரவில் படுக்கும் முன், முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை கவனிப்போம் .

தினமும் படுப்பதற்கு முன் சிறிது ஒலிவ் ஆயிலை முகத்தில் தடவி, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவினால், முகம் பொலிவுடன் திகழும்.

தினமும் ஒலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், அதில் உள்ள வைட்டமின் ஈ, சரும செல்கள் சீரழிவடைவதைத் தடுக்கிறது.

சருமம் விரைவில் முதுமைத் தோற்றம் அடைவதை ஆலிவ் ஆயில் தடுக்கிறது.

ஒலிவ் எண்ணெயில் உள்ள ஸ்குவாலின் அமிலம், சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, சருமம் தளர்வதைத் தடுக்கும். 

என்றும் இளமையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

உங்களுக்கு மிகுந்த வறட்சியான சருமம் என்றால், ஒலிவ் எண்ணெயைக் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து படுத்தால் சரும வறட்சியிலிருந்து முகத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்.

தினமும் இரவில் முகத்திற்கு மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். 

ஒலிவ் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, பொலிவான முகத்தைப் பெறலாம்.

ஒலிவ் எண்ணெயில் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் ஏ ஏராளமாக நிறைந்து காணப்படுகிறது. 

எனவே தினமும் இரவில் ஒலிவ் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்பட்டு, முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக இருக்கும்.

முகத்தில் ஏதேனும் தழும்புகள் இருந்து, அதனைப் போக்க வேண்டுமானால், தினமும் இரவில் ஒலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால் அவ்விடத்தில் புதிய செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். 

நாளடைவில் தழும்புகளும் மறைந்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here