மக்களே உங்களுக்கு ஒரு மில்லியன் பெறும் வாய்ப்பு; செய்ய வேண்டியது இதுதான்!

56

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மோசடியில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவரைக் கைதுசெய்வதற்கு பொதுமக்களின் உதவியை கேட்டுள்ளனர் பொலிஸார்.

அதற்கமைய, குறித்த நபர் தன்னை வைத்தியர், பொறியியலாளர், ஆசிரியர், வர்த்தகர் என இனம்காட்டிக்கொண்டு, பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேகநபர் தன்னை வைத்தியராக அடையாளப்படுத்திக்கொண்டு, கொள்ளையடிக்கப்பட்ட வாகனமொன்றை 165 இலட்சத்துக்கும் போலி கையெழுத்தைப் பயன்படுத்தி 1,550,000 ரூபாய் பெறுமதியான வாகனத்தை பெற்றுக்கொண்டமை, 30 இலட்சம் பெறுமதியான வானை கொள்ளையிட்டமை உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த சந்தேகநபர் மேலும் பல மோசடிகளில் ஈடுபடலாம் என தெரிவித்துள்ள பொலிஸார், இவரைக் கைதுசெய்வதற்கு பொதுமக்களின் உதவியை கேட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேகநபரின் பெயர் ராசிக் மொஹமட் பாருக் என்பதுடன், இவர் இலக்கம்.122/15 பி மாங்கட வீதி, கடவத்த, 133/05 நாமல் டெரன்ஸ், வட்டியகொட, 89/03 ரஜமாவத்த, கனுவன, ஜாஎல ஆகிய முகவரிகளைச் சேர்தசர என்றும் தெரிவித்துள்ள பொலிஸார் இவரைக் கண்டுபிடித்துகக் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் ரூபாயை அன்பளிப்பாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர், மேலும் இவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால், 071- 8592604, 0112-2685958 ஆகிய ​தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: