மக்களை தாக்கியவர்களை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவு

0
332

மட்டக்களப்பு – வாகனேரி குளத்துமடு பகுதியில், சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட 9 பேரையும்  இம்மாதம் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, வாழைச்சேனை  நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்

சந்தேகநபர்கள் 09 பேரும், நேற்று மாலை கைதுசெய்யப்பட்டதாக வாழைச்சேனை பிரதேசத்துக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எம்.ஜெயசுந்தர தெரிவித்தார்.

இதன்போது மணல் ஏற்றப் பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரங்கள் 02, மோட்டார் சைக்கிள்கள் 05 என்பனவும் கைப்பற்றப்பட்டிருந்தன.

குறித்த நபர்களை, பொலிஸ் நிலையத்தில் வந்து சரணடையுமாறு தாம் அழைப்பு விடுத்தபோதிலும் அவர்கள் அதனை மறுத்து, காட்டுப் பகுதியில் தலைமறைவாகியிருந்தனர் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது தப்பியோட முயற்சித்த வேளை அவர்களைக் கைதுசெய்து நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.