மனிதர்களை கடவுள் போல் காப்பாற்றும் அதிசய பழம்!

185

ஆல்பக்கோடா பழம் ஆங்கிலத்தில் fruit of the Prunus என்று அழைக்கப்படும்.

தமிழ் நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த பழம் கருநிறமாக இலந்தைப்பழம் அளவில் இருக்கும்.

அதிக புளிப்புச்சுவை கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி.. உயிர்ச்சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. இது உடலுக்குப் பலத்தைத் தருவதுடன் இரத்தத்தை விருத்தி செய்யும். என்று கண்டறியப்பட்டுள்ளது.

காய்ச்சலின் போது இந்த பழத்தைச் சாப்பிட்டால் உடல் சூட்டினை தணிப்பதுடன் வாய்க்கசப்பைப் போக்கி நாவறட்சி மாறும். மேலும் வாந்தியைநிறுத்தி தலைவலியை குணப்படுத்தும்.

சொறி,சிரங்கு உள்ளவர்கள் இந்த பழத்தைச் சாப்பிட்டால் சொரி, சிரங்கு உடனடியாக குணமடையும். மேலும் வாதமும், பித்தமும் நீங்கும். மலத்தைப் போக்கும். தேக உஷ்ணத்தைச் சாந்த்தப் படுத்தும்.