மன்னார் மடுவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி; முற்றாக முடக்க நடவடிக்கையா?

375

மன்னார் பொது வைத்தியசாலையில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களில் மடு பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சன் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே குறித்த நபர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறியமுடிகின்றது.

குறித்த பகுதியை தற்போது முடக்குவது தொடர்பில் எந்த முடிவு எடுக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: