மறைந்த நண்பரை நினைத்து கண்ணீர்விட்ட ரஜினிகாந்த்

0
56

இயக்குநர் மகேந்திரன் பல கிளாசிக் திரைப்படங்களை இயக்கிய பின் , விஜய்யின் ‘தெறி’, விஜய் சேதுபதியின் ‘சீதகாதி’ போன்ற திரைப்படங்களில் ஒரு நடிகராகவும் களத்தில் இறங்கினார். கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்டா படத்தில் நடித்தார். அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் பெரும் இழப்பையும் சோகத்தையும் வெளிபடுத்தியது.

இந்த நிலையில் இன்று அவரது பிறந்த நாள் என்பதால், தனது நெருங்கிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுப்பிய சிறப்பு ஆடியோ குறிப்பை, மகேந்திரனின் மகனும் இயக்குநருமான ஜான் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

அந்த ஆடியோவில் “முள்ளும் மலரும் படத்தில் என்னுடைய நடிப்பை பற்றி புகழந்து ஜனங்க பேசுறாங்கனு சொன்ன அதுக்கு முழு காரணம் மெகேந்திரன் சார் அவர்கள். அவர் என்னுடைய மிக மிக நெறுங்கிய நண்பர். ரொம்ப வித்தியாசமான மனிதர். அவருடைய டேலண்ட் பற்றி நான் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. அவருக்கு பணம், பேர், புகழ் அதெல்லாம் சம்பாத்திக்கனும் என்று கொஞம் கூட அதை பற்றி கவலையே படவில்லை, அதைபற்றி அவர் எப்போதும் பேசியதே கிடையாது, அதற்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கவே இல்லை. ஒரு தரமாண படங்கள் கொடுக்க வேண்டும், தமிழ்பட தரத்தை உலக அளவிற்கு கொண்டு போகவேண்டும், ஒரு வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது தான் அவரது ஒரே நோக்கம். சினிமாவை அணு அணுவாய் ரசித்தவர், நேசித்தவர். சமீபத்தில், இந்த கொரோனா நேரத்தில் உதிரிப் பூக்கள் படம் பார்த்தேன். படம் முடிந்ததும் எனக்கே தெரியாமல் எழுந்து நின்று கைத் தட்டினேன். அப்படியே உட்கார்ந்து ஒரு பத்து நிமிடத்துக்கு என் கண்ணில் தண்ணீர் வந்தது அவரை நினைத்து. இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு போய்விட்டாரே என்று. என்னுடைய நல்ல பக்கியம் என்னவென்றால், சமீபத்தில் நான் அவருடன் நடிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. நிறைய நேரம் நங்கள் பேசினோம், நிறைய நேரம் கூட இருந்தோம். அதை மறக்கமுடியாது” என பேசியிருந்தார் சூப்பர் ஸ்டார்.இந்த ஆடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது