மறைந்த ஸ்ரீதேவி வீட்டில் இரண்டு பேருக்கு கொரோனா 😮

0
87

மூத்த பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் தனது வீட்டு உதவியாளர் சரண் சாஹுவுக்கு கோவிட் 19 சோதனை செய்ததாகவும்,பின் நோய் உறுதியானதும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதையும் அவர் கூறினார்.

இந்த நிலையில் மும்பையில் உள்ள போனி கபூரின் லோகண்ட்வாலா இல்லத்தில் மேலும் இரண்டு ஊழியர்கள் நோய் தொற்று அறிகுறி தென்பட்டு, சோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் போனி கபூர் தனது மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூருடன் இந்த வீட்டில் வசித்து வருகிறார், மேலும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.