மலச்சிக்களை போக்கும் அவரைகாய்!

102

அவரை காய் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. வெண்மை நிறம், நீல நிற பூக்களை உடையது.

கொடி வகையை சேர்ந்தது. கொத்துக் கொத்தாக காய்த்து உணவாக பயன்படுகிறது. சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் காயாக அவரை விளங்குகிறது..

அவரை கொடியின் இலை, பூக்களை பயன்படுத்தி தலைவலி, ஆறாத புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். 5 அவரை இலைகளை துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் சிறிது அவரை பூக்கள் சேர்க்கலாம்.

கால் ஸ்பூன் மஞ்சள் பொடி, ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கலாம்.இது தலைவலி, கழுத்து வலிக்கு மருந்தாகிறது. காய்ச்சலை தணிப்பதுடன் புண்களை ஆற்றுகிறது. இருமல், சளிக்கு மருந்தாகிறது.

பூஞ்சை காளான்களை போக்கும். இந்த தேனீரை மேலே ஊற்றி கழுவுவதன் மூலம் தோல் நோய்கள் சரியாகிறது. சாம்பாராக வைத்து சாப்பிட்டாலும், பொரியலாக சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
சுவை மட்டுமல்லாமல் சுகம் தரும் மருந்தாக அவரைக்காய் விளங்குகிறது.

சுமார் 100 கிராம் அவரை காயில் மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்பு சத்து, நார் சத்து, புரதசத்து உள்ளிட்டவை அடங்கி இருக்கிறது.

அவரை இலையை பயன்படுத்தி கழிச்சல், சீத கழிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் அவரை இலை பசை, கால் ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் பனங்கற்கண்டு ஆகியவற்றுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர், வடிகட்டி காய்ச்சிய பால் சேர்க்கவும்.

இதை குடித்தால் கழிச்சல், சீத கழிச்சல் சரியாகிறது. வயிற்று புண் குணமாகிறது.
அவரை காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன.

மூளைக்கு, முதுகு தண்டுக்கு, இளம் தாய்மார்களுக்கு, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு என அனைத்து வகையிலும் பயன்படுகிறது. ரத்த சிவப்பு அணுக்களுக்கு ஊட்டம் தருகிறது. நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், நச்சுக்களை நீக்கி புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு அற்புதமான மருந்தாகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. அவரை இலை வயிற்றுபோக்குக்கு மருந்தாகிறது. அவரை இலையை மேல் பூச்சாகவும் பயன்படுத்தலாம்.
அவரை இலை சாறுவை மெல்லிய துணியில் நனைத்து நெற்றியில் பத்தாக போடும்போது தலைவலி குறையும்.

அவரை இலையை பயன்படுத்தி சேற்று புண்ணுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். அவரை இலை பசையுடன் சிறிது மஞ்சள் பொடி, சிறிதளவு சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் சேர்த்து கலக்கவும்.

களிம்பு பதத்தில் இருக்கும் இதை சேற்று புண் இருக்கும் இடத்தில் வைத்தால் சரியாகும்.இளம் தாய்மார்கள் அவரைக்காயை உண்ணும்போது, வயிற்றில் வளரும் குழந்தைக்கு எலும்பு, மூளை, முதுகு தண்டு வளர்ச்சி முழுமையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு அற்புத மருந்தாகிறது.