“மாஸ்டர்” திரைப்படம் ஓ.டீ.டீ யில் ரிலீஸா? விஜயின் அதிரடி முடிவு

0
108

மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் மட்டும் இல்லாம் ஒட்டு மொத்த திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரே திரைப்படம் நம் தளபதி விஜய் மற்றும் நம் மக்கள்செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள “மாஸ்டர்” திரைப்படம் தான்.

இத்திரைப்பதில் பாடல்கள், 1st look 2nd look மற்றும் 3rd look போன்றவை வெளியாகி பெரும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், இத்திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இத்திரைப்படத்தை குறித்து பேசிய வார்த்தைகள் மேலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்ததும் முதலில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். மற்ற திரைப்படங்கள் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகே வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாஸ்டர் திரைப்படம் OTT யில் வெளியாவது குறித்து பல வதந்திகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகின. இதனை குறித்து தளபதி விஜய் “நான் ரசிகர்களுக்காகவே திரைப்படம் நடிக்கிறேன் எனவே என்னுடைய திரைப்படம் முதலில் திரையரங்குகளில் தான் வெளியிட வேண்டும் என்று பகிரங்கமாக அதிரடியாக கூறியுள்ளார்”, என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.