மின் இணைப்பு பெற பணவசதியின்றி தவிக்கும் 700 குடும்பங்கள்!

0
97

போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் பல வருடங்களாக மின்சாரம் இல்லாது வசித்து வரும் எழுநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவர்கள் இன்று புதன் கிழமை கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மின்சாரம் இல்லாத குடும்பங்களின் பதிவுகள் நேற்றுக் காலை 10 மணியளவில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட போதே பல வருடங்களாக மின்சாரம் இல்லாது வசித்து வரும் எழுநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது பதிவுகளை வழங்கியுள்ளனர்.

தற்போது இலங்கை மின்சார சபையினால் இலவச இணைப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் புதிதாக மின் இணைப்பினைப் பெறுபவர்கள் இணைப்புக் கட்டணமாக ரூபா 20650.00 இனை செலுத்த வேண்டும் இவற்றை செலுத்தி மின் இணைப்பை பெற முடியாமல் பல குடும்பங்கள் கிளிநொச்சியில் வசித்து வருகின்ற நிலையிலையே இன்று இப் பதிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கான மின் இனைப்புக்கள் பெண் தலமைத்துவ குடும்பங்கள் , பாடசாலை மாணவர்கள் உள்ள குடும்பங்கள் ,மாற்றுத்திரனாளிகள் உள்ள குடும்பங்கள், என தர வரிசைப்படுத்தப்பட்டு தர வரிசையின் அடிப்படையில் கட்டம் கட்டமாக மின்சாரம் வழங்கப்பட உள்ளது.

பதிவுகளை மேற்கொண்டவர்களின் தர வரிசைப்படி இலவசமாக இணைப்புகள் வழக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராஜா மேற்கொண்ட முயற்சியினாலும் தனிப்பட்ட நிதி உதவியினாலும் இலவச மின் இணைப்பு வழக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.