மீண்டும் கப்பல் ஏறப்போகும் எண்ணெய்! அதிரடி அறிவிப்பு!!

228

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய எல்படோஸின் Aflatoxin கலந்துள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்ட நிலையில் தேங்காய் எண்ணெயை மீள ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

கட்டான றீபைன்டி நிறுவனத்தினர் இதுதொடர்பான விடயங்களை முன்னெடுத்துள்ளனர். எதிர்வரும் சில நாட்களுக்குள் அதனை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சுங்கப்பிரிவினர் எமக்கு தெரியப்படுத்தினர்.

அலி பிரதர்ஸ், எதிரிசிங்க நிறுவனங்களுக்கு சுங்கத்திணைக்கள அதிகாரிகள் சென்று கொண்டுவந்துள்ள எண்ணெயின் அளவு தொடர்பில் ஆராய்ந்து அதுதொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். இது சந்தைக்கு விநியோக்கப்பட்டிருந்தால் சுங்கத்திணைக்கள அதிகாரிகளின் அறிவுரையை பின்பற்ற தவறியிருந்தால் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயின் அளவை மீள் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை காணப்படுமாயின் அதுதொடர்பில் சுங்கத்திணைக்களம் என்ற அடிப்படையில் உரிய தண்டப்பணமும் சட்டநடவடிக்கையும் எடுக்கப்படும்.

மக்கள் மத்தியில் அச்சநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது அது சாதாரணமானது. நாம் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் என்ற வகையில் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் 25 மாவட்டங்களிலும் ஒரு மாவட்டத்திற்கு ஐவர் என்ற ரீதியில் 25 மாவட்டங்களில் இருந்து 125மாதிரிகளை பெற்று தெங்கு அபிவிருத்தி பிரிவினருக்கு அனுப்பி அந்த மாதிரிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளோம்.

இந்நிலையில் 55 மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது இந்த முடிவின் அடிப்படையில் அவை அனைத்தும் நுகர்வுக்கு ஏற்றது என எமக்கு அறியக்கிடைத்துள்ளது என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: