முகநூல் மெசஞ்சரில் புதிய வசதி அறிமுகம்

0
137

தனது தளத்தை பாதுகாப்பாக உருவாக்கும் நோக்கில் பேஸ்புக் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

அந்த வகையில்  பேஸ்புக் மெசஞ்சர் செயலிக்கு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. 

புதிய வசதியில்  ஒரு குறுந்தகவலை அதிகபட்சம் ஐந்து பேருக்கு மட்டுமே அனுப்புவதற்கு அனுமதிக்கிறது.

இவ்வாறு செய்யும் போது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்ட போலி விவரங்கள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை குறைக்க முடியும் என பேஸ்புக் மெசஞ்சரின் ஜே சலிவன் தெரிவித்துள்ளார்.

புதிய  நடவடிக்கை விரைவில் நடைபெற இருக்கும் அமெரிக்க மற்றும் நியூசிலந்து தேர்தல் மற்றும் தற்போதைய கொரோனாவைரஸ் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக பேஸ்புக்நிறுவனம்  தெரிவித்துள்ளது.