முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது தொடந்தும் விசாரணை

0
244

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று புதன்கிழமை மூன்றாவது நாளாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ரிஷாட் பதியுதீன் வாக்கு மூலம் அளித்துள்ளார்.இன்று காலை 9 மணிக்கு ஆரம்பித்த விசாரணை இன்று மாலை வரை தொடருமென எதிர்ப்பாக்கப்படுகிறது.

நேற்று முன் தினம் திங்கட் கிழமையும், நேற்றுச் செவ்வாய்க் கிழமையும் ரிஷாட் பதியுதீன் வாக்குமூலம் வழங்கியிருந்தார். அதே வேலை நவ்பர் மௌலவியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.இன்று அவர் கைவிலங்குடன் அழைத்துவரப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுடன் நவ்பர் மௌலவிக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல் .எம் ஹிஸ்புல்லா மீதும் குற்றசாட்டுக்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் பதவியிலிருந்த போது 2019 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுடன் ரிஷாட் பதியுதீன் , ஹிஸ்புல்லா ஆகியோருக்கு தொடர்புள்ளதாக பௌத்த பிக்குமாரல் குற்றம் சாட்டப்பட்டிருந்த போதும் இலங்கை முஸ்லீம் மக்கள் எவருக்கும் இந்த தாக்குதலுடன் தொடர்பு இல்லையென அப்போதைய அரசாங்கம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது