மூதாட்டியின் காதில் வாழ்ந்த சிலந்தி

0
131

சீனாவில் சிசுவான் மாகாணத்தில் உள்ள மின்யாங் மருத்துவமனைக்கு வருகை தந்த  மூதாட்டியின் காதில் உள் நுழைந்து காணப்பட்ட சிலந்தி ஒன்று காதிற்குள் வலை பின்னி வாழ்ந்து வந்த நிலையில் உயிருடன் வெளியேற்றப்பட்டுள்ளது. 

குறித்த மூதாட்டி கடும் காது வலியால் தவிப்பதாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.  அதனைத் தொடர்ந்து அவரது காதை பரிசோதித்த போது உள்ளே பட்டு பந்துபோல் உருண்டைதெரிந்துள்ளது.  

இதையடுத்து, ஓடோஸ்கோபி மூலம் பரிசோதித்ததில், சிலந்தி ஒன்று உயிருடன் உள்ளே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர், மருத்துவ உபகரணங்களை கொண்டு சிலந்தியை அகற்றியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here