மெஸ்ஸியின் ஆண்டு வருவாய் எவ்வளவு தெரியுமா?

0
84

2020 ஆம் ஆண்டின் அதிக வருமானம் ஈட்டிய காற்பந்து வீரர்களுக்கான ஃபோர்ப்ஸ் இதழின் பட்டியலில் பார்சிலோனா வீரர் லியோனல் மெஸ்ஸி முதலிடத்தில் உள்ளார்.

அதன்படி மெஸ்ஸியின் ஆண்டு வருவாய் 126 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

மேலும் இப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுள்ளார். அவரது ஆண்டு வருவாய் 117 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

அத்தோடு இப் பட்டியலில் நெய்மர் இரண்டாவது இடத்திலும், கிலியான் எம்பாப்பே நான்காவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.